பேராசிரியர் க. த. திருநாவுக்கரசு
இருபதாம் நூற்றாண்டின் தமிழாய்வுலகில் குறிப்பிடத்தகுந்த தமிழறிஞர்களுள் பேராசிரியர் க.த.திருநாவுக்கரசும் (1931-1989) ஒருவராவார். பன்மொழி அறிஞராகவும் பல்துறை வல்லூநராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்கிய பெருந்தகை அவர்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான தமிழாய்வு அனுபவத்தைக் கொண்ட அவர் சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பயிற்சி ஆசிரியராகவும், சென்னை மாநிலக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும், சென்னை மணலி தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும் விளங்கிய அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் திருக்குறள் ஆராய்ச்சிப் பிரிவில் பேராசிரியராகவும் திகழ்ந்து அரும்பணியாற்றியுள்ளார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகவும் மற்றும் இயக்குநர் (ஆராய்ச்சியியல்) ஆகவும் இருந்து சீரிய தமிழ் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.
திருக்குறள் ஆய்வுகள், வரலாறு-பண்பாட்டு ஆய்வுகள், பாரதியியல் எனத் தமிழாய்வின் பல நிலைகளிலும் முத்திரை பதித்தவர். அவரது நூல்களில், திருக்குறள் நீதி இலக்கியம், சிந்துவெளி தரும் ஒளி, இனமரபு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, நாகரிகமும் பண்பாடும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் பண்பாடு, திருக்குறளில் கற்பனைத் திறனும் நாடக நலனும், தமிழ்க்கவிதையில் பாரதியின் தாக்கம் முதலியன குறிப்பிடத்தக்கன.
சென்னைப் பல்கலைக்கழத்தின் பேரவைக்குழு, கல்விக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகச் செயலாற்றியுள்ள பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் திகழ்ந்திருக்கிறார். அளப்பரிய பங்களிப்புகளை தமிழியல் ஆய்வுலகிற்கு நல்கிய அவரது பணிகள் இந்திய அளவிலும், தமிழக அளவிலும், அயல் நாடுகளிலும் போற்றப்பட்டு வருகின்றன.
அண்மைச் செய்திகள்



Sorry, no posts matched your criteria.
பெற்ற விருதுகள்
18.08.1954 அன்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், TK FRANKLIN GELL MEDAL பி.ஏ. ஹானர்ஸ் (எம்.ஏ) படிப்பில் முதல் வகுப்பு – முதல்நிலை பெற்றமைக்காக வழங்கப்பட்டது.


1974 ஆம் ஆண்டு, அவர் எழுதிய, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

1985 ஆம் ஆண்டு, சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது வழங்கப்பட்டது.
